சின்ன மஸ்தா மந்திர்....

இந்த ஆலயம் 

ஜார்கண்ட் மாநிலத் தில் இருக்கிறது.

Advertisment

அங்குள்ள ராம்கட் என்ற மாவட்டத்தில் இது இருக்கிறது. இந்த ஆலயம் இருக்கும் ஊரின் பெயர் "சித்ராபூர்.' "சின்ன மஸ்திகா மந்திர்' என்றும் இந்த ஆலயத்தை அழைக்கிறார்கள்.

தாமோதர் நதி, பேடா நதி என்ற இரு நதிகள் ஒன்றுசேரும் இடத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. பேடா நதிக்கு பைரவி நதி என்றொரு பெயரும் இருக்கிறது.

மலையிலிருந்து பாய்ந்துவரும் ரஜரப்பா என்ற புகழ்பெற்ற அருவிக்கு அருகில் இந்த ஆலயம் இருக்கிறது.

Advertisment

இது ஒரு சக்தி பீடம். இந்தியாவிலுள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்று இது.

இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் அன்னை சின்ன மஸ்தா மிகவும் உக்கிரமாக இங்கு காட்சியளிக்கிறாள்.

இந்த ஆலயத்தின் வடக்கு சுவருக்கு அருகில் தெற்கு திசையைப் பார்க்கும் வகையில் அன்னையின் சிலை இருக்கிறது.

அகழ்வாராய்ச்சி துறையினர் இந்த ஆலயத்தை 6,000 வருடத்திற்கு முந்தைய பெருமைகொண்டது என குறிப்பிடுகின்றனர்.

சிலர் இந்தக் கோவிலை மகாபாரத காலத்திலேயே கட்டப்பட்டது என கூறுகிறார்கள்.

இந்த ஆலயத்தில் தந்திர பூஜைகள் அதிகமாக செய்யப்படுகின்றன. அஸ்ஸாமிலுள்ள காமக்யா ஆலயத்தில் செய்யப்படும் தந்திர பூஜைகளுக்கு நிகராக இங்கு செய்யப்படும் தந்திர பூஜைகள் இருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

செவ்வாய், சனி ஆகிய கிழமைகளில் இங்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகின்றன.

பீஹார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலிருந்து இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்.

இந்த ஆலயத்திற்கு வந்து அன்னையை வழிபட்டால், தங்களின் வேண்டுதல்கள் அனைத்தும் கட்டாயம் நிறைவேறுகின்றன என பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

சிந்தா பூரணி என்றொரு பெயரும் இந்த அன்னைக்கு இருக்கிறது.இங்கிருக்கும் அன்னைக்கு தலை இல்லை. தலையை அவள் கையில் வைத்திருக்கிறாள்.

இந்தக் கோவிலில் சூரியன், சிவன் ஆகியோரின் சிலைகளும் இருக்கின்றன. இந்த ஆலயத்தில் பூமிக்குள்ளிருந்து வெந்நீர் வருகிறது. இங்கு தர்மசாலைகள் இருக்கின்றன.

புராண காலத்தில் அன்னை சக்தியின் தலை விழுந்த இடம் இது. நவராத்திரி காலத்தில் இங்கு விசேஷ பூஜைகள் நடக்கின்றன.

இங்கு வரக்கூடிய பக்தர்கள் தாங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறியபிறகு, ஆடுகளைப் பலி தருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்

இந்த ஆலயம் ஜார்கண்டின் தலைநகரமான ராஞ்சியிலிருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. ராஞ்சியில் விமான நிலையம் இருக்கிறது.

அருகிலிருக்கும் ரயில் நிலையம் ராம்கட். அங்கிருந்து 28 கிலோமீட்டர் தூரத்தில் சின்ன மஸ்தா ஆலயம் இருக்கிறது.

சென்னையிலிருந்து ராஞ்சிக்குச் செல்வதற்கு 33 மணிகள் பயணிக்க வேண்டும்.